Tuesday 3 March 2015

8.86 லட்சம் ப்ளஸ் டூ மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஒரு ஐடியா

எவ்வளவு படித்திருக்கிறோம் என்பதை வைத்தல்ல; எவ்வளவு தூரம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்துத்தான் உள்ளது மதிப்பெண்கள்.



மதிப்பெண்கள் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் தேர்வு பயம்.

மதிப்பெண் குறைந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். ஆனால் பயப்படுவதால்தான் மதிப்பெண் குறைகிறது. 


தேர்வறையில் பதட்டத்தால் பாடம் மறந்துபோவதை நாங்கள் ஸ்டேட் டிபெண்டன்ட் மெமரி என்கிறோம். பாடங்களை படிக்கும்பொது ஒரளவு ஒய்வான மனநிலையில் படிக்கிறார்கள். தேர்வைறையில் முற்றிலும் மாறான பதட்டமான மனநிலையில் இருக்கிறார்கள். இந்த நிலை வேறுபாடுதான் மறதிக்கு காரணம்.

எனவே தேர்வறையில் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திக்கொண்டு படித்ததை இப்பொழுது  எழுதிப்பார்க்கப் போகிறோம் என்று நினைத்துக்கொண்டு எழுதினால் பதட்டமின்றி எழுத முடியும். படித்ததும் மறக்காமல் இருக்கும். மதிப்பெண்களும் பெற முடியும்.

மேலும் தெரிந்து கொள்ள :

ஏறத்தாழ 54000 மாணவர்கள் பார்த்துப் பயனடைந்த எங்களில் நினைவாற்றல் பயிற்சி வீடியோ பதிவு : 

https://www.youtube.com/watch?v=bKU26GC6LSA




4 comments:

  1. Replies
    1. வீடியோவையும் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களைச் சொன்னால் இன்னும் மகிழ்வேன். நன்றி

      Delete
  2. முத்து நிலவன் ஐயா அவர்கள், தனது வலைப் பூவில் தங்களைப் பற்றி ஒருமுறை எழுதியிருந்தார். அப்பதிவின் மூலமே தங்களின் வலைப் பூவினைஅறிந்து வருகை தந்தேன்.
    மாணவர்களின் நினைவாற்றல் பயிற்சி வீடியோவினைக் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
    மிகவும் பயனுள்ள செய்திகளை அருமையா, அனைத்து மாணவ மாணவியருக்கும் புரியும் வகையில் முன் வைத்துள்ளீர்கள்.
    தங்களின் வீடியோவினை தரவிறக்கம் செய்து, டேப்லெட்டில் பதிவு
    செய்து, என்து பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கும் அவ்வீடியோவினை போட்டுக் காட்டியுள்ளேன்.
    மாணவியர் அனைவரும் மகிழ்ந்தனர், புது இரத்தம் பாய்ச்சிய உணர்வினைப் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்காக எனது நன்றியறிதலையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
    ஒரே ஒரு கருத்தினை மட்டும் முன் வைக்க விரும்புகின்றேன்,
    தாங்கள் அணிந்திருந்த உடை மட்டும், தங்களுடன் ஒட்டாத ஓர் உணர்வினையே ஏற்படுத்தியது . சாதாரண உடையில் தாங்கள் காட்சியளித்திருப்பீர்களேயானால், பொது மக்களில் ஒருவராக, எளிமையான தோற்றத்தில், மாணவர்களிடம், அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பது என்து எண்ணமாகும்.
    எனது வகுப்பு மாணவிகள் சார்பாகவும், எனது சார்பாகவும்
    மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன்

    ReplyDelete