Friday 20 March 2015

எழுத்தாளர்களை கொண்டாடுவோம்


‘உயர்ந்தவர்களை கொண்டாடாத தேசத்தில் அவர்கள் மீண்டும் தோன்றுவதில்லை’ என்ற வரிதான் இப்படியொரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பதற்கான தூண்டுதல்.

என் வாழ்க்கையை மாற்றியது இல்லை எனக்கு வாழ்க்கையை தந்தது புத்தகங்கள்

இன்று எனக்கு வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கிறது. வாழ்க்கையை தங்கள் எழுத்துக்கள் மூலமாக வாழக்கற்றுத்தந்த ஆசான்களை நான் கொண்டாட விரும்புகிறேன்.

ஏப்ரல் தொடங்கி மாதந்தோறும் ஒரு எழுத்தாளரை கொண்டாட உள்ளோம்.

புதிதாக வாசிப்பவர்கள் 100 பேருக்கு, ஒரு எழுத்தாளரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே புத்தகத்தை படிக்கக்கொடுத்து அவர்களின் வாசிப்பு அனுபவத்தை அந்த எழுத்தாளருடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

எழுத்தைக்கொண்டாடுவதன் மூலம்தானே எழுத்தாளர்களை கொண்டாட முடியும்.

புத்தக விமர்சனம்
கேள்வி பதில்
எழுத்தாளரின் எழுத்து அனுபவங்கள்
வாசகர் பரிசு என நடைபெற உள்ள இந்நிகழ்வில் எழுத்தாளர்களை கௌரவிக்கும்விதமாக வேறு என்ன செய்யலாம்?

நிகழ்ச்சி சிறக்க வழிகாட்டுதல்கள் தந்து உதவுங்கள்.

சினிமாக்காரர்களை மட்டுமே கொண்டாடிப்பழகிய சாதாரண மனங்களில் மாற்றம் ஏற்படுத்தும்விதமாக யாரைக்கொண்டாட வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தும்விதமாக நிகழ்ச்சி அமைய வேண்டும் என முயற்சிக்கிறோம்.

'எழுத்தாளர்களை கொண்டாடுவோம்'  நிகழ்வை ஏப்ரல் முதல் சென்னை கே.கே.நகர் சாதனாவில் நடத்த உள்ளோம்.

4 comments:

  1. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளோடு ஒதுங்கிவிடாதீர்கள் நண்பரே. விழாவில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள். எழுத்தாளர்களை எப்படியெல்லாம் கௌரவிக்கலாம் என்று யோசனை சொல்லுங்கள்.

      Delete
  2. உன்னத முயற்சி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எழுத்துக்களை கொண்டாடும் நாம்தானே எழுத்தாளர்களையும் கொண்டாட வேண்டும்.

      Delete