Sunday 19 April 2015

'எஸ்.ரா'வை கொண்டாடுவோம்



எழுத்தைக் கொண்டாடுவதன் மூலம்தானே எழுத்தாளர்களை கொண்டாட முடியும். 

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின்  எழுத்துக்களை கொண்டாடும்விதமாக புதிதாக வாசிப்பவர்கள் 100 பேருக்கு, எஸ்.ரா அவர்களின் புத்தகத்தை படிக்கக்கொடுத்து அவர்களின் வாசிப்பு அனுபவத்தை எஸ்.ரா.வுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது

எழுத்தாளர்களை கொண்டாடுவோம் மாத நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சியாக எஸ்.ரா.வை கொண்டாடுவோம் நிகழ்வு வரும் சனிக்கிழமை 25.4.15 அன்று மாலை 5 மணிக்கு துவங்கி 8 மணி வரை சாதனாவில் நடைபெற உள்ளது.

புத்தக விமர்சனம்
கேள்வி பதில்
எழுத்தாளரின் எழுத்து அனுபவங்கள்
குறும்படம் திரையிடல்
ஆகியவற்றோடு தங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளருக்கு வாசகர்கள் பரிசு தரும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

சினிமாக்காரர்களை மட்டுமே கொண்டாடிப்பழகிய சாதாரண மனங்களில் மாற்றம் ஏற்படுத்தும்விதமாக யாரைக்கொண்டாட வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தும்விதமாக நிகழ்ச்சி அமைய வேண்டும் என முயற்சிக்கிறோம்.

நிகழ்ச்சி சிறக்க வழிகாட்டுதல்கள் தந்து உதவுங்கள்.

நிகழ்வில் பங்கு கொள்ள : 7299855111

அரங்க முகவரி : சாதனா நாளெட்ஜ் பார்க் 32வது தெரு ஆறாவது செக்டார் கே.கே நகர் சென்னை.78

7 comments:

  1. //எஸ்.ராவின் //

    This has misled me. I thought you are talking about some Rao. Since I know only Vittal Rao as a Tamil writer, I guessed it; or perhaps it may be some other Rao. I am surprised to see you are talking about S.Ramakrishnan, the Tamil writer. Essraa is ok. It won't mislead anyone to any Rao. In Tamil எஸ்ராவின் is correct. It won't make me think about any Rao.

    ReplyDelete
    Replies
    1. நன்றி .திருத்தி விடுகிறேன். நிகழ்ச்சிக்கு அவசியம் வாருங்கள்.

      Delete
  2. கட்டாயம்- சாருவையும் ஒழுங்கு செய்யுங்கள். அவர் ஒரே புலம்புவர்- கொண்டாடுவதில்லையாம் தமிழ்ச்சமுதாயம்- எழுத்தாளர்களை!!ம்

    ReplyDelete
  3. கட்டாயம். ஒவாராக கொண்டாடுகிறார்கள் என்று புலம்புகிற அளவிற்கு கொண்டாடிவிடுவோம். விடுங்கள்.

    ReplyDelete
  4. அருமையான முன்மாதிரியான நிகழ்ச்சி நண்பரே
    நிகழ்வு சிறக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தவறாது கலந்து கொள்ளுங்கள். சென்னையில் உள்ள நண்பர்களுக்கும் நிகழ்ச்சி பற்றி சொல்லுங்கள்.

      Delete
  5. வாழ்த்துகள்!!! நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே!!. SPL. price should be given for those who have written for young kids to make them involvement on reading. :)

    ReplyDelete